search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நதிநீர் இணைப்பு"

    ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari #Godavari #Cauvery
    அமராவதி:

    ஆந்திராவின் அமராவதியில் நடந்த பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும்.

    இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தில் கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Godavari #Cauvery
    கோதாவரி-காவிரி உள்பட 5 நதிநீர் இணைப்பு திட்டங்களை நடப்பு நதியாண்டிலேயே தொடங்கி செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருவதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். #NitinGadkari #Parliament
    புதுடெல்லி:

    வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நாட்டில் உள்ள பிரதான நதிகளை இணைக்கும் திட்டம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய மோடி அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.



    இந்த திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி அர்ஜுன் ராம் மேவால் ஆகியோர் பதிலளித்தனர்.

    இதில் அர்ஜுன் ராம் மேவால் கூறுகையில், ‘30 நதிநீர் இணைப்பு திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். இதில் கோதாவரி-காவிரி, கென்-பெட்வா மற்றும் டாமன் கங்கா-பிஞ்சால் உள்பட 5 திட்டங்கள் இறுதிவடிவம் பெற்று இருக்கின்றன’ என்று கூறினார்.

    பின்னர் இந்த திட்டங்கள் குறித்து நிதின் கட்காரி விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த 5 திட்டங்களில் குஜராத் மற்றும் மராட்டியத்தில் நிறைவேற்ற போகும் தபி-நர்மதா, டாமன் கங்கா-பிஞ்சால் நதிகள் இணைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். இதைப்போல உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்துடன் பண்டல்கண்ட் பகுதியை இணைக்கும் கென்-பெட்வா இணைப்பு தொடர்பாகவும் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

    கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் கீழ், கோதாவரியில் ரூ.60 ஆயிரம் கோடியில் கோலாவரம் அணை கட்டப்படும். பின்னர் கோதாவரி நீரை கிருஷ்ணாவிலும், கிருஷ்ணாவில் இருந்து பெண்ணாரிலும், பெண்ணாரில் இருந்து காவிரியிலும் இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். கர்நாடகாவும், தமிழ்நாடும் 40 டி.எம்.சி. நீருக்காக போராடும் நிலையில் 3000 டி.எம்.சி. நீர் கடலில் கலந்து வீணாகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்த 5 திட்டங்களும் நடப்பு நிதியாண்டிலேயே அதாவது அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் தொடங்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதியுதவி பெறப்படும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Parliament
    ×